என் நிகழ் காலங்கள்..
சில நேரங்களில்
இறந்த காலங்களை வாழ்ந்து கொண்டிருக்கின்றன
சில நேரங்களில்
எதிர் காலங்களை வாழ்ந்து கொண்டிருக்கின்றன
இறந்து போன குழந்தைக்கும்
இன்னும் பிறக்காத குழந்தைக்குமாக
செலவழிந்து போகின்றது
என் கையிலிருக்கும் உணவான காலம்
என் மடியிலிருக்கும் குழந்தை பட்டினியில்....
S Farook
17/12/09


No comments:
Post a Comment